உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தானியாதிவாசத்தில் துவாரபாலர்கள் சிலை

திருமுருகன்பூண்டி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தானியாதிவாசத்தில் துவாரபாலர்கள் சிலை

அவிநாசி; திருமுருகன் பூண்டி ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதியதாக துவார பாலகர்கள் தான்யாதிவாசத்தில் வைக்கப்பட்டது.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் மூலவர் சன்னதி முன் வைப்பதற்காக புதியதாக செய்யப்பட்ட ஜெயன், விஜயன் ஆகிய துவார பாலர்கள் ஐந்து அடி உயரத்தில் செய்யப்பட்டு இன்று கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், தான்யாதிவாசத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. துவார பாலர்கள் சிலையை, உபயதாரர் திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தினர் செய்திருந்தனர். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அறங்காவலர் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, திருமுருகநாதர் சுவாமி அறக்கட்டளை, சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !