/
கோயில்கள் செய்திகள் / மணப்பட்டி மாரியம்மன் கோயிலில் பூதங்கள் விளையாடிய பெரிய படுகளம்; பக்தர்கள் பரவசம்
மணப்பட்டி மாரியம்மன் கோயிலில் பூதங்கள் விளையாடிய பெரிய படுகளம்; பக்தர்கள் பரவசம்
ADDED :579 days ago
திருச்சி; மணப்பாறை, மணப்பட்டியில் தானாமுளைத்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வைகாசித் திருவிழா 8 கிராமங்களின் சாா்பில் ஆண்வுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழா 19ம் தேதி துவங்கியது. விழாவில் மாவிளக்கு வழிபாடு, பால்குடம் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு நடைபெற்றது. விழாவின் 10ம் நாளில் முக்கிய நிகழ்ச்சியான ஆண், பெண் பூதங்கள் விளையாடும் பெரிய படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட இரு பூதங்களை கிராம மக்கள், தாரை தப்படைகளுடன் தூக்கி வந்தனர். இதில் விழா நடத்தும் எட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞா்களும் படுகளம் ஆடி வந்தனா். பூதங்கள் விளையாடும் பெரிய படுகளத்தை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்நது இன்று(29ம் தேதி) காலை காப்பு இறக்குதலுடன் விழா நிறைவுபெற்றது.