உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளிம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

மாகாளிம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீவீரமாத்தியம்மன் மற்றும் ஸ்ரீதன்னாசியப்பன் கோவில்களில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. அம்மனுக்கு தினமும் ஒரு அவதார ரூபத்தில் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி, திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து கம்பம் நடுதல், தீர்த்தக்குட ஊர்வலம் ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் விநாயகர் பொங்கல் மற்றும் முளைப்பாலிகை, அம்மை அழைப்பு ஆகியன நடந்தது. விழாச் சிறப்பாக நேற்று அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் ஏராமானோர் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை ஆகியன நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !