உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம நாமம் சொன்னால் நூறு ஜென்ம பாவம் நீங்கும்; திருச்சி கல்யாணராமன்

ராம நாமம் சொன்னால் நூறு ஜென்ம பாவம் நீங்கும்; திருச்சி கல்யாணராமன்

மதுரை; ராம நாமம் சொன்னால் 100 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று ஆன்மீக பேச்சாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.

மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு  மதுரை  தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் தொடங்கியது. இதனை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்  தொடங்கி வைத்து பேசினார். நிகழ்வில் கம்பர் பெருமை என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது;  உலகில் தனம் இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள். அதற்காக தனமே பிரதானம் என்று இருக்கக் கூடாது. நம்மிடம் நிறைய சொத்து சுகம் இருந்தால்  சொந்தம் பந்தம் வரும். கடவுள் இல்லை என்று ஒருவன் சொன்னான் என்றால்  அவன் கடவுளை உணரவில்லை என்று அர்த்தம். அதற்காக நாம் அவர்களிடம் விதாண்டா வாதம் செய்யக்கூடாது. நாம் வாழ்க்கையில் நூறு ஆண்டு வாழ்ந்தோம் என்றால் அதில்   50 ஆண்டு தூக்கத்திலே போய்விடுகிறது. யாரையும் இந்த உலகத்தில் கட்டுப்படுத்த முடியாது. பகவானால் மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும்.  நம்மால்தான்  நமக்கு பிராப்ளம்.எல்லோரும் கடவுளிடத்தில்பணம்  வேண்டும்  வெளிநாடு போக வேண்டும்  என்று இறைவனிடம் கேட்கிறான். யாராவது நிம்மதி வேண்டும் என்று கேட்பதில்லை . நாம் பகவானிடம் நிம்மதி கொடுனு வேண்டனும். நிம்மதியை கொடுப்பது பகவான்தான். ராமாயணம் என்பது கதை கிடையாது. இதிகாசம். பக்தி இவ்லாமல் மனிதாபிமானம் இல்லாமல் கதை இருக்கிறதா‌? சனாதனம் என்பது தர்மம் என்பது தான் அர்த்தம். பள்ளியில் சேர்க்கும் போதே என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்தினால் ஜாதியை ஒழித்து விடலாம். தர்மத்தை கடைப்பிடிப்பது இன்னொருத்தரை  துன்புறுத்துவது அல்ல. யாரிடமும் சட்டம் பேசக்கூடாது.‌ பனிவுடன்  கேட்டு பாருங்கள் அனைத்தும் கிடைக்கும். விஞ்ஞான வளர்ச்சியில் நல்ல பொய்‌ பேச‌ கற்று கொண்டோம். எல்லா மாநிலமும் ஒன்றியதால் தான் ஒன்றிய அரசு என்றே பெயர் வந்தது. எதுக்குமே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உண்டு. ராமாயாண காலத்தில் இருந்தே அது இருக்கிறது. வள்ளுவர் காவி கட்டினாரா,  வெள்ளை வேட்டியை கட்டினாரா என யோசிப்பதை விட   அவரது கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொருவரும் குலத்தெய்வத்தை குடும்பத்தோடு கும்பிட வேண்டும். ராம நாமம்  சொன்னால் 100 ஜென்மங்களில் செய்த பாவம்  அனைத்தும் போய்விடும் என்றார். நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான  ஆர் பி உதயகுமார் திருச்சி கல்யாண ராமனுக்கு   பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இன்று ராம அவதாரம் என்ற தலைப்பில் பேசுகிறார். ராமாயண தொடர் சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !