உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறை தினம் : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

விடுமுறை தினம் : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம்; விடுமுறை நாளை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று விடுமுறை நாளை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !