உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

வைகாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

ராமேஸ்வரம்; வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

இன்று வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனத்தில் பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் கோயில் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் திட்டக்குடி, கோயில் மேலரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !