வடக்கு வாசல் செல்லி காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :600 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் வடக்கு வாசல் செல்லி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு மூலவரான செல்லி காளியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், திபாரதனை நடந்தது. அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.