உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி; சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோற்சவ விழா இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர். 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினசரி அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். ஜூன் 12 ல் இரவு 8:00 மணிக்கு தபசுக் காட்சியும், இரவு 12:00 மணிக்கு விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறும். ஜூன் 14 ல் காலை 8:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !