உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

சந்தன மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

கமுதி; கமுதி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் சந்தன மாரியம்மன் சிறப்புபூஜை நடந்தது. கிராமத்தில் இருந்து முக்கிய விதிகளில் அக்னிசட்டி,பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.சந்தன மாரியம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 21வகையான அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.இதனை முன்னிட்டு 508 விளக்கு பூஜை நடந்தது. நிறைவு நாளாக முளைப்பாரி ஊர்வலமாக தூக்கிச் சென்று ஊரணியில் கரைத்தனர். ஏற்பாடுகளை அய்யனார்குளம் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !