உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் பாலாலயம்; யாகசாலை பூஜையுடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் பாலாலயம்; யாகசாலை பூஜையுடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரம், விமானங்களை புனரமைத்து திருப்பணிகள் செய்வதற்கான பாலாலயம் நேற்று மேதினி பூஜையுடன் துவங்கியது.


இக்கோயிலில் வட பத்ரசயனர் சன்னதி ராஜகோபுரம், விமானம், துணை சன்னதிகளான ஆண்டாள் அவதார சன்னதி, சக்கரத்தாழ்வார், பெரியாழ்வார், கூரத்தாழ்வார் சன்னதிகளின் விமானங்களை புனரமைத்து திருப்பணிகள் செய்வதற்கான பூஜைகள் நேற்று இரவு 6:30 மணிக்கு மேல் துவங்கியது. இதற்காக ராப்பத்து மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கோயில் பட்டர்கள் பாலாலய மேதினி பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை ஜன.28 காலை 9:45 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் பாலாலய சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !