காரமடை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றம்
ADDED :14 hours ago
காரமடை: காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் இரவு, கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. 31ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம், பிப்.1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் மோகன பிரியா மற்றும் உறுப்பினர்கள், கோயில் செயல் அலுவலர் வனிதா, பால சுப்பிரமணியம் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.