உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 16ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 16ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

அவிநாசி; திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ கரிவரத ராஜ பெருமாள் கோவிலில், 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிேஷக விழா, 13ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம், ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம், தனம் மற்றும் லட்சுமி பூஜை, மிருத்ஸங்க்ரஹணம், ரக் ஷா பந்தனம் வேத ப்ரபந்த பாராயணம் ஆகியவையும், 14ம் தேதி முதல் மற்றும் 2ம் கால யாக வேள்வியில் திருப்பல்லாண்டு, ஸஹஸ்ர நாமபாராயணம், பாலாலய நித்ய திருவாராதனம், விமான கலசம் மற்றும் துவார பாலகர்கள் நிறுவுதல்,ஸ்ரீ பாஞ்சராத்ர பஞ்ச குண்ட அக்னி ப்ரதிஷ்டை நவ குண்ட ப்ரதிஷ்டை நடைபெறுகிறது. வரும், 15ம் தேதி, மூன்றாம் மற்றும் நான்காம் கால யாக வேள்வியில் 108 கலசஸ்நபந திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 16ம் தேதி 5ம் கால யாக வேள்வி மற்றும் மஹா கும்பாபிஷேகம், திருச்சி – திருவெள்ளறை மேலத்திருமாளிகை சவும்ய நாராயணாச்சார்ய சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் விமலா, திருவடி திருத்தொண்டர் அறக்கட்டளை மற்றும் சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் சவுமீஸ் நடராஜன், பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, அறங்காவலர் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிசாமி, திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, பட்டாச்சார்யார்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !