திருப்பரங்குன்றம் கூடல்மலை தண்டபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :553 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கூடல்மலை தண்டபாணி சுவாமி, கூடல் நாயகர், கூடல் அம்பிகை கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூன் 6 காலையில் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பூஜை முடிந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.