உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை காளியம்மன் கோவிலில் செவ்வாய் சிறப்பு வழிபாடு

கோவை காளியம்மன் கோவிலில் செவ்வாய் சிறப்பு வழிபாடு

கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண்-09 ல் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஆரஞ்சு நிற வண்ணப் புடவையில் புஷ்ப அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !