சேந்தமங்கலத்தில் 22 ஆண்டுகளுக்கு பின் குதிரை எடுப்பு விழா
ADDED :561 days ago
பாலமேடு; பாலமேடு அருகே சேந்தமங்கலத்தில் 22 ஆண்டுகளுக்கு பின் பெத்தம்மாள் சாமி, கருப்புசாமி, வீரணசாமி கோயில் குதிரை எடுப்பு விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் வானவேடிக்கை, மேலதாளத்துடன் சாமி ஆட்டமும், இரவு கருப்புசாமி, வீரனசாமி குதிரை கண் திறப்பு விழா மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று சுவாமி குதிரைகளை எடுத்து பூஞ்சோலை சென்றனர். பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு செய்தனர்.இரவு வள்ளி திருமண நாடகம் நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சொக்கன் கூட்டம் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.