ஆனி மாத பிறப்பு; கோவை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :814 days ago
கோவை; ராம் நகர் சித்தி விநாயகர் கோவிலில் ஆனி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் விநாயகப் பெருமான் வெள்ளிக்காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.