உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு போதுராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் தினந்தோறும் கோயிலில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்திற்காக 1,00,116 ஒரு லட்சத்து நூற்று பதினாறு ரூபாய்கான‌ காசோலையை  நன்கொடையாக போதுராஜு குடும்பத்தினர் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். இந்த  நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் சதீஷ் மல்லி, நாகபூஷணம் நாயக், ரவி, கோபால், ஸ்ரீநாத் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !