செஞ்சி பூரணி பொற்கலை சமேத ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :577 days ago
செஞ்சி; செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூரணி பொற்கலை சமேத ஐயனார் கோவில் மகா கும்பாபிஷேம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 14ம் தேதி கணபதி வழிபாடும், மாலை வாஸ்து பூஜை, யாகசாலை பிரவேசமும் நடந்தது. 15ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹூதி தீபாராதனை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இரவு யந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் தொடர்ந்து 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.