ராமர் கோவிலில் சத்யசாயி நாம சங்கீர்த்தன இசைக்கச்சேரி
ADDED :447 days ago
கோவை; ராம்நகர், ராமர் கோவிலில், ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், நாம சங்கீர்த்தனம் நடந்தது.ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி, ராம் நகர், ராமர் கோவிலில் நேற்று நடந்தது. இதில், மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் இணைந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீ வாசுதேவன் மற்றும் குழுவினரின், நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில், ராமர், சத்ய சாயிபாபா மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட கடவுள்களை போற்றி வணங்கி, 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.