பரமக்குடி கோயில்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு
ADDED :486 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோயில்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடந்தது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் ஆண்டவர் கோயிலில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி அருள்பாளிக்கிறார். இங்கு நேற்று மாலை சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்து சென்றனர். பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது.