/
கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; பல மணிநேரம் காத்திருந்த தரிசனம்
திருச்செந்துாரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; பல மணிநேரம் காத்திருந்த தரிசனம்
ADDED :491 days ago
திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்து, 4:30 மணிக்கு விஸ்வரூபம், 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற காலபூஜைகளும் நடந்தது. அதிகாலை முதலேயே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், குபேர பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர். அவர்கள் கடலில் நீராடி, பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.