தன்னாசியப்பர் கோவில் வேப்ப மரத்தில் பால் வடிவதால் பக்தர்கள் வழிபாடு
ADDED :486 days ago
அன்னூர்; தன்னாசியப்பர் கோவில் வேப்ப மரத்தில் எட்டு நாட்களாக பால் வடிவதால் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
பொங்கலூர் ஊராட்சி, பாப்பநாயக்கன் பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான தன்னாசியப்பர் ஜீவசமாதி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் 30 அடி உயர வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் எட்டு நாட்களுக்கு முன்பு பால் வடிய துவங்கியது. தொடர்ந்து எட்டாவது நாளாக நேற்றும் மரத்தில் பால் வடிந்து கொண்டே இருந்தது. இதை பார்த்து பக்தர்கள் தன்னாசியப்பர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்துபலரும் எட்டு நாட்களாக பால் வடிந்து வரும் வேப்ப மரத்தை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.