உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவத்தில் 7 ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. விழாவின் பிரதான நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. அன்று காலை 7:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது.இரவு 9:00 மணிக்கு, தோட்ட திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !