வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :828 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று வருடாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் வைத்து புன்யாவஜனம், அக்னி, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.