விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :506 days ago
விருதுநகர்; விருதுநகரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மேல் காலை 11:00 மணிக்குள் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.