மடப்புரம் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :504 days ago
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் கண்மாய்கரையில் அமைந்துள்ள செங்கடி அம்மன் கோயில் பால்குட உற்சவ விழா இன்று நடந்தது. செங்கடி அம்மன் கோயிலில் நீண்ட நாட்களாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் பக்தர்கள் முயற்சி எடுத்து இந்தாண்டு ஆனி மாத பால்குட உற்சவத்தை நடத்தினர். வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மடப்புரம் நாட்டாமை சஞ்சீவி, அறங்காவலர் குழு தலைவர் முருகன், கட்டட தொழிலாளர் சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.