கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :840 days ago
பெரியகுளம்; பெரியகுளம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குருவப்பபிள்ளையார் கோயிலில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.