/
கோயில்கள் செய்திகள் / பிரம்ம குமாரிகள் அமைப்பின் கோடி லிங்கம் தரிசனம் காட்சி: நவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு
பிரம்ம குமாரிகள் அமைப்பின் கோடி லிங்கம் தரிசனம் காட்சி: நவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு
ADDED :1 days ago
ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி., நகராட்சி திடலில், ஓம் சாந்தி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பாக நவராத்திரியை முன்னிட்டு கொலுவில், சகஸர கோடி லிங்க தரிசனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு அனைத்து கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் கொழு வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், ஊட்டியில் உள்ள ஏ.டி.சி., பகுதியில் கொழு கண்காட்சி, சொர்க்க கண்காட்சி, கோடி லிங்க தரிசன காட்சி ஆகியவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 18ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. இதனை பொதுமக்கள் இலவசமாக சென்று கண்டு மகிழலாம். மேலும், தியானமும் மேற்கொள்ளலாம். ஏற்பாடுகளை, பிரஜ பிதா பிரம்ம குமாரிகள் அமைப்பு செய்துள்ளது.