தசரா திருவிழா: கிரேசி மோகனின் நான் ஸ்டாப் காமடி நாடகம்
ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கத்தில் நடந்து வரும் தசரா திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, கிரேசி மோகனின் ‘நான் ஸ்டாப் காமடி’ நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஊரப்பாக்கம் ஊராட்சியில் நவராத்திரியை ஒட்டி தசார விழா வரும் 20ம் தேதி வரை அக்., 20ம் தேதி வரை, நடைபெற உள்ளது.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், தினமும் மாலை 5:30 மணிக்கு, பேராசிரியர் ரத்னமாலாவின் உள்ளத்தை வளமாக்கும் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:45 மணிக்கு, கலைஞர்களில் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, இன்று 4ம் நாள் நிகழ்ச்சியாக, கிரேசி மோகனின் ‘நான் ஸ்டாப்’ காமடி நாடகம் ‘சாக்லேட் கிருஷ்ணா’ மாலை 6:45 மணிக்கு நடக்கிறது. நேற்றைய 3ம் நாள் நிகழ்ச்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நேற்று மாலை ‘எது பக்தி’ என்ற தலைப்பில் ரத்னமாலா பேசியதாவது:
கோவிலுக்கு செல்வது, திருநீர் பூசுவது, இறைவனுக்கு பூமாலை சுற்றுவது, கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது பக்தியின் வெளிப்பாடு மட்டுமே. இதையெல்லாம் ஒருவர் தினமும் செய்வதால் மட்டும் உண்மையான பக்திமானா மாற முடியாது.
பொய்யும் புரட்டும் நிறைந்த மனம்தான், இறைவனையும் நினைக்கிறது.
பொய்யும் புரட்டும் நிறைந்த மனதிற்குள் இறைவன் எப்படி வருவார்?
இறைவா, என் இதயத்தில் குடியேறு என வேண்டுவதே பக்தி. இறைவனை பற்றி பேசுவது பக்தி அல்ல. இறைவனோடு பேசுவதே பக்தி.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று மாலை நடந்த ராக்கர்ஸ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, அனைவரையும் கவர்ந்தது.
ஊரப்பாக்கம் மக்கள் மற்றும் நந்திவரம் - ஊரப்பாக்கம் பிளாட்டினம் சிட்டி லயன்ஸ் கிளப், சங்கர பக்த ஜன சபா, வாசவி மற்றும் வனிதா கிளப் ஆகியோர் இணைந்து, நவராத்திரி, தசரா விழாவை நடத்தி வருகின்றனர்.