உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர வித்யாலயா பள்ளியில் நவராத்திரி கொலு விழா

சங்கர வித்யாலயா பள்ளியில் நவராத்திரி கொலு விழா

புதுச்சேரி: புதுச்சேரி, மகாத்மா காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி கொலு விழா கடந்த 11ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று பள்ளியின் தாளாளரும், பேதபாரதியின் தலைவருமான பட்டாபிராமன் பங்கேற்று, சக்தி வேதபாரதியின் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்தை துவக்கி வைத்தார்.

பள்ளியின் முதல்வர் தர்மசமவர்தனி தலைமை தாங்கினார். நவராத்திரி கொலுவில் அழகிய வண்ண வண்ண பொம்மைகள் புராணக் கதைகளை நினைவூட்டு வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நவராத்திரியின் 9 நாட்களும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை, மாணவர்களின் பக்திப் பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லுதல், பக்தி கதைகள், பரத நாட்டியம், இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !