மொரட்டாண்டி சுந்தர மூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :503 days ago
புதுச்சேரி; மொரட்டாண்டி சுந்தர மூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில் நடந்த ஏகதின லட்சார்ச்சனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வானுார் வட்டம், மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில் முதலாம் ஆண்டு அபிஷேக ஏக தின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.