அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED :505 days ago
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல் நேற்று (ஜூன் 28) திறந்து எண்ணப்பட்டது. ரொக்கமாக ரூ.56 லட்சத்து 51 ஆயிரத்து 119, தங்கம் 92 கிராம், வெள்ளி 260 கிராம் கிடைக்கப் பெற்றன. கோயில் துணை கமிஷனர் கலைவாணன், மதுரை உதவி கமிஷனர் வளர்மதி, அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, அறங்காவலர் பாண்டியராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, பி.ஆர்.ஓ., அலுவலர் முருகன், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.