அமர்நாத் பனிலிங்க தரிசனம் துவக்கம்; ஆகஸ்ட் 19 வரை தரிசிக்கலாம்
ADDED :505 days ago
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் யாத்திரை இன்று முதல் துவங்கியது.
ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் யாத்திரை இன்று(29ம் தேதி) துவங்கியது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை இன்று (ஜூன்29) தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தாண்டு யாத்திரைக்கு 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.