பங்குனி முதல் செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :197 days ago
கோவை; பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக ராஜ அலங்காரத்தில் கர்த்தருக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.