அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்
ADDED :9 minutes ago
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் மூலவர் சன்னதிக்கு தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடக்கும்.