காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா தரிசனம்
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா, தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் மூலவர் சன்னதியில் சிறப்பு சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு வேத ஆசிர்வாதமும் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு, கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் குர்ரப்பா செட்டி, மாவட்ட நீதிபதி அருணா சாரிகா, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குருநாதம், ஸ்ரீ காளஹஸ்தி நீதிமன்ற நீதிபதிகள் ஏ.நரசிம்ம மூர்த்தி (கூடுதல் மாவட்ட நீதிபதி), பேபி ராணி, நீதிபதி கிருஷ்ணப் பிரியா, மாஜிஸ்திரேட் கோடேஸ்வர ராவ், நீதிமன்ற மேற்பார்வையாளர் ரவி, கோயில் உதவி செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, நெறிமுறை உதவி செயல் அலுவலர் மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரவி, ஆய்வாளர் சுதர்ஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.