சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா
ADDED :4 hours ago
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவில் சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இன்று சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில். இக்கோவிலின் சித்திரை பிரம்மோத்சவம், கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி சிம்ம வாகனத்திலும், 3ம் தேதி அனுமந்த வாகனத்திலும் உத்சவர் எழுந்தருளினார். நேற்று மாலை சேஷ வாகனத்தில், சந்தான வேணுகோபாலசாமி வீதியுலா வந்தார். வரும் 8ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும் 9ம் தேதி சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோத்சவம் நிறைவுபெறுகிறது.