உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் உபகோயில் கும்பாபிஷேகம் எப்போது ?

ராமேஸ்வரத்தில் உபகோயில் கும்பாபிஷேகம் எப்போது ?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான காட்டுபிள்ளையார் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்திற்கு காத்திருக்கிறது.


ராமேஸ்வரம் திருக்கோயிலில் இருந்து 2 கி.மீ.,ல் பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுபிள்ளையார் கோயில் உள்ளது. அக்காலத்தில் பாதயாத்திரை பக்தர்கள் முதலில் காட்டுபிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலுக்கு வருவது வழக்கம். பிரசித்த பெற்ற இக்கோயிலில் 6 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்து ரூ. 25 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்தது. அதன்படி கோயிலில் கோபுரம் செய்து வர்ணம் பூசும் பணி முடிந்தது. இதனைத்தொடர்ந்து கோயில் சுற்றுச்சுவரில் வாட்டர் வாஷ் செய்து புதுப்பிக்கும் பணி நடக்க உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிந்து விடும் நிலையில், பணியை துவக்காமல் கிடப்பில் உள்ளது. கோயிலில் பாலாலயம் செய்து 6 மாதம் ஆகியும், திருப்பணி விரைந்து முடித்து கும்பாபிஷேகம் எப்போது நடக்கும் என பக்தர்கள் காத்திருக்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !