உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோவில் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி மாரியம்மன் கோவில் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, ஏப்., 14ம் தேதி வரை தினமும் மாலை அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். முக்கியமாக ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உட்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளுகிறார். முதல் நாளான நேற்று,மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் ஊட்டி மாரியம்மன் கோவிலில் உபயம் நடந்தது. அதில், புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். திரளாமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !