உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போர் முடிந்து அமைதி நிலவ திருப்பூரில் திருவாசக முற்றோதல்

போர் முடிந்து அமைதி நிலவ திருப்பூரில் திருவாசக முற்றோதல்

திருப்பூர்: மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் தணிந்து, அமைதி நிலவ வேண்டுமென வேண்டி, திருவாசகம் முற்றோதல் நேற்று நடத்தப்பட்டது.


திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம், அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று திருவாசக முற்றோதல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு துவங்கி, மாலை 3:00 மணி வரை, தொடர்ந்து, 51 பதிகங்களில் உள்ள அனைத்து பாடல்களும் பாராயணம் செய்யப்பட்டது. ஈரான்– இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வர வேண்டும்; போர் பதற்றம் நிறைவடைந்து, அமைதி நிலவ வேண்டும் என்ற பொது வேண்டுதலுடன் திருவாசகம் முற்றோதல் நடந்துள்ளதாக, மாணிக்கவாசகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !