உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சத சண்டி மகாயாகம்

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சத சண்டி மகாயாகம்

மயிலாடுதுறை; கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சத சண்டி மகாயாகத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர், சுவாசினி பூஜை கன்னியா பூஜை வடுக பூஜை ஆகியவற்றுடன் மகா பூரணாகுதி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலை அடுத்த கருவாழக்கரையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது குழந்தை வரம் தரும் முக்கிய ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சத சண்டியாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108  திரவிய பொருட்கள் கொண்டு யாகம் செய்யப்பட்டது இதற்காக பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆலயத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து சுமங்கலிப் பெண்களுக்கான சுவாசினி பூஜை, கன்னிப் பெண்களுக்கான கன்னியா பூஜை பிரம்மச்சாரிகளுக்கான வடுகபூஜை ஆகியவை நடைபெற்றது தொடர்ந்து மகாபூர்ணாகுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !