உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழனிவாசல் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கழனிவாசல் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; கழனிவாசலில் நடைபெற்ற சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் அமைந்துள்ளது கழனிவாசல். இங்கு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் சீறும் சிறப்பு மாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 28 ம் தேதி அன்று, விக்னேஷ்வர பூஜை, கோபூஜை தண பூஜை , கணபதி ஹோமம், நவக்கிரக பூஜையோடு துவங்கியது கடந்த இரண்டு நாட்களாக யாகசாலையில் அமைக்கபட்டு இருந்த புனித நீர் கடங்களுக்கு வேத விற்பன்னர்களால் நான்கு கால பூஜை நடைபெற்றது. இதனையொட்டி நான்காம் காலம் முடிவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. அதன் பின், யானை முன்னே செல்ல சிவ வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒத புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து செல்ல, மேள தாளங்கள் முழங்க,சித்தி விநாயகர் ஆலய கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக சீறும் சிறப்பு மாக நடைபெற்றது. இக் கும்பாபிஷேகத்தை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கண்டு களித்து சித்தி விநாயகரின் அருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !