ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :795 days ago
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் இருக்கும் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னிதியில் ஆனி மாத சிவராத்திரி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.