ஆனி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. ஈசனை தரிசித்து பரவசம்
ADDED :500 days ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, இன்று (5ம் தேதி) ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் 3 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசையை முன்னிட்டு, காலை தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.