மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
4705 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
4705 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள் திருக்கோளநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணி துவக்க விழா நேற்று நடந்தது. இக்கோயில் கி.பி.,8ம் நூற்றாண்டை சேர்ந்த, குடவரை சிற்பம் நிறைந்தவை. புனித தீர்த்த சுனைகள், கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில், திருப்பணிக்கு, அரசு ரூ. 34.40 லட்சம் வழங்கியது. இப்பணியை முன்னிட்டு, கோயிலில் நேற்று பாலாலய பூஜை நடந்தது. நவ.,10ல் முதற்கால யாகசாலை, நேற்று 2ம் காலபூஜை நடந்தது. அதை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு பாலாலயம் நடந்தது. திருப்பணியை பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார். அறநிலைய துறை துணை கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம். எல்.ஏ., அருணகிரி, சிறப்பு அதிகாரி நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
4705 days ago
4705 days ago