காஞ்சிபுரம் ராமலிங்கேஸ்கவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :452 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாதத்தில் வரும், உத்திர நட்சத்திர தினத்தன்று, ஆனி திருமஞ்சனம் உற்சவ விழா நடக்கும். நடப்பாண்டு ஆனி திருமஞ்சன உற்சவம் நேற்று மாலை 4:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, இரவு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.