பரமபதநாதனாக சேஷ வாகனத்தில் அருள்பாலித்த பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்
ADDED :482 days ago
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் பரமபதனாதனாக சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 13 கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. அன்னம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் நேற்று பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் வீற்றிருந்தார். இன்று பெரிய திருவடியான கருட வாகனத்தில் அருள்பாளிக்க உள்ளார். தினமும் காலை, மாலை வீதி உலா வரும் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஜூலை 18 அன்று இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று திருமண வரம், குழந்தை பேரு வேண்டுதல் வைப்பவர்கள் நேத்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவில் தினமும் பாகவதர்கள் பஜனை பாடல்கள் மற்றும் பாசுரங்களை இசைத்தபடி வருகின்றனர்.