உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வருகை புரிந்தனர். இவரை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.பின்னர் ராதாகிருஷ்ணன் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் சனீஸ்வர பகவானை தனது குடும்பத்துடன் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !