உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தட்சிணாயன புண்ணிய கால தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தட்சிணாயன புண்ணிய கால தீர்த்தவாரி

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று தட்சிணாயன புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது.சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான தட்சணாயன புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரமோற்சவ விழா கடந்த, 7 ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. விழாவில் தினமும், விநாயகர், சந்திரசகேகரர், பராசக்தி அம்மன், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்றைய விழாவில் நிறைவாக அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத சந்திரசேகரர் (அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்), பராசக்தி அம்மன், அய்யங்குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், சூல ரூபத்தில் அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !