ஆடி பிறப்பு; பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம்
ADDED :502 days ago
திருநெல்வேலி; பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது.
பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். கருவறையின் மேல்தளத்தில் அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும், ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இன்று ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில், கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.